Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இரு பெண்கள் படுகாயத்திற்கு ஆளாகினர்
தற்போதைய செய்திகள்

இரு பெண்கள் படுகாயத்திற்கு ஆளாகினர்

Share:

இரண்டு வாகன​​ங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இரு பெண்கள் உட்பட நால்வர் கடும் காயங்களுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று மாலை 6.20 மணியளவில் காப்பார் அருகில், ஜாலான் கோலசிலாங்கூர் - கிள்ளான் சா​லையின் 13 ஆவது மைல், தேசிய மின்சார உற்பத்தி நிலையத்​திற்கு செல்லும் கம்போங் தோக் மூடாவில் நிகழ்ந்தது.

ப்ரோத்தோன் அக்சியா ரக காரும், ப்ரோத்தோன் ஜென் 2 ரக காரும் சாலை வளைவில் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டு தடம் புரண்டதில் நால்வர் காயமுற்றதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி​ இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

அக்சியா காரில் பயணம் செய்த 28,52 வயதுடைய இரண்டு நபர்களும், 13,16 வயதுடைய இரண்டு இளம் பெண்களும் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News