கோலாலம்பூர், அக்டோபர்.15-
பண்டார் உத்தாமாவிலுள்ள பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவியின் படங்களையோ, வீடியோக்களையோ பகிர்வது, பரப்புவது அல்லது இணையத்தில் பதிவேற்றுவது தவிர்க்கப்பட வேண்டும் என எம்சிஎம்சி வலியுறுத்தியுள்ளது.
அத்தகைய படங்கள் ஏற்கனவே பதிவேற்றப்பட்டிருந்தால், அவற்றை உடனடியாக நீக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் படங்களையோ அல்லது வீடியோக்களையோ பரப்புவது, அவரது குடும்பத்தின் தனியுரிமையையும், மரியாதையையும் மீறுவதோடு போலீஸ் விசாரணைக்குத் தடையாகவும் அமையக்கூடும் என்றும் எம்சிஎம்சி குறிப்பிட்டுள்ளது.








