Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கடப்பிதழ் வெளியீட்டு அலுவலகம் இரவு 8.00 மணி வரை செயல்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கடப்பிதழ் வெளியீட்டு அலுவலகம் இரவு 8.00 மணி வரை செயல்படும்

கோலாலம்பூர், டிச. 19-


நாளை வெள்ளிக்கிழமையுடன் ஒரு வார கால பள்ளி விடுமுறை தொடங்குகிறது. பள்ளி விடுமுறையையொட்டி நாடு முழுவதும் உள்ள குடிநுழைவுத் துறையின் கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களின் பணி நேரம் டிசம்பர் 21 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி டிசம்பர் 28 வரை மேலும் மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜொகூர், கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்கள் தவிர இதர அனைத்து மாநிலங்களில் டிசம்பர் 23 முதல் 26 வரை காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை குடிநுழைவுத்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அத்துறை தனது என அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அதே சமயம், டிசம்பர் 21, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பணி நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 3.09 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜொகூர், கெடா, திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்கள் டிசம்பர் 22 முதல் 24 வரை காலை 8.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை செயல்படும் என்று அது அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →