பத்து பஹாட், செப்டம்பர்.27-
ஜோகூர், பத்து பஹாட், கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 9.04 மணியளவில் மிதமான நில நடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 3.4 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
இந்த நில நடுக்கம், பத்து பஹாட்டிலிருந்து தென்கிழக்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது என்று அது குறிப்பிட்டுள்ளது.
நில நடுக்கம், வடக்கே 1.7 பாகையிலும், கிழக்கே 103.1 பாகையிலும் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மெட் மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








