Mar 23, 2026
Thisaigal NewsYouTube
மக்களை தூண்டிவிடுவதற்கு Black Rock விவகாரத்தை பயன்படுத்தாதீர்
தற்போதைய செய்திகள்

மக்களை தூண்டிவிடுவதற்கு Black Rock விவகாரத்தை பயன்படுத்தாதீர்

Share:

நிபோங் தெபால், ஜூன் 22-

மக்களை அச்சுறுத்துவற்கும், தூண்டிவிடுவதற்கும் அமெரிக்காவின் பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான Black Rock விவகாரத்தை ஒரு சாதனமாக பயன்படுத்த வேண்டாம் என்று சில தரப்பினருக்கு தொடர்புத்துறை அமைச்சர் பாஹ்மி பட்சில் நினைவுறுத்தினார்.

இஸ்ரேல் அல்லது அந்த நாட்டில் தளமாக கொண்டுள்ள எந்தவொரு நிறுவனத்துடன் மலேசியா ஒத்துழைப்புகொள்ளும் நடவடிக்கை முற்றாக நிராகரிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெளிவான விளக்கத்தை அளித்து விட்டார்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் Black Rock நிறுவனம், Malaysia Airports Holding Berhad பங்குகளை வாங்குகின்றது என்று உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி, மக்களை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுவது குறுகிய அரசியல் சிந்தனையை கொண்ட ஒரு தந்திரமாகும் என்று பாஹ்மி பட்சில் வர்ணித்தார்.

Malaysia Airports Holding Berhad மறுகட்டமைப்பு தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனை நடவடிக்கையிலும் Black Rock ஈடுபடவில்லை என்று அந்த பன்னாட்டு நிறுவனத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் நிறுவனமான Global Infrastructure Partners பகிரங்கமாக அறிவித்து விட்டது.

இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டுள்ள நிறுவனங்களுக்கு ம லேசியாவில் இடம் இல்லை என்பதை பிரதமரும் தெளிவாக விளக்கி விட்டார்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனம், Malaysia Airports Holding Berhad பங்குகளை வாங்குகிறது என்பதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தீய நோக்கில் இவ்விவகாரத்தை அரசியலாக்கி வரும் தரப்பினரை அரசாங்கப் பேச்சாளரான பாஹ்மி பட்சில் இன்று கடுமையாக சாடினார்.

Related News

மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் செந்தோசா கிளைக் கூட்டத்தில் டாக்டர் சிவபிரகாஷ் பங்கேற்பு

மலேசிய இந்து சங்கத்தின் புக்கிட் செந்தோசா கிளைக் கூட்டத்தில் டாக்டர் சிவபிரகாஷ் பங்கேற்பு

பட்டாசு விற்பனை நிலையங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள்  மறுஆய்வு: அமைச்சர் ஙா கோர் மிங் அறிவிப்பு

பட்டாசு விற்பனை நிலையங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மறுஆய்வு: அமைச்சர் ஙா கோர் மிங் அறிவிப்பு

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர்  கைது

விடுதியில் சக நாட்டுக்காரர் குத்திக்கொலை: நேபாள இளைஞர் கைது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்