Jan 3, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவப் பயிற்சி சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம்: மலேசிய மருத்துவ மன்றம் மன்னிப்பு கோரியது
தற்போதைய செய்திகள்

மருத்துவப் பயிற்சி சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம்: மலேசிய மருத்துவ மன்றம் மன்னிப்பு கோரியது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.03-

2026-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மருத்துவப் பயிற்சிச் சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதற்கு மலேசிய மருத்துவ மன்றம் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் விண்ணப்பங்கள் அதிகரித்ததன் காரணமாக இந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு ,டிசம்பர் 31-க்கு முன்னதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மருத்துவப் பயிற்சியாளர்களின் விண்ணப்பங்களானது MeRITS அமைப்பில் இன்னும் செயலாக்கத்தில் இருப்பதையும் மலேசிய மருத்துவ மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களானது மருத்துவச் சட்டம் 1971, பிரிவு 20 மற்றும் மருத்துவ ஒழுங்குமுறைகள் சட்டம் 2017-இன் ஒழுங்குமுறை பிரிவு 28-இன் கீழ், முறையான ஆவணங்களோடு, கட்டணங்களும் செலுத்தப்பட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், அவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான, வருடாந்திர மருத்துவப் பயிற்சிச் சான்றிதழை இன்னும் பெறவில்லை என்றாலும் கூட, அந்தச் சான்றிதழ் வழங்கப்படும் வரை, எந்தவொரு அமலாக்க நடவடிக்கையும் இன்றி, மருத்துவப் பயிற்சியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலேசிய மருத்துவ மன்றம் அறிவித்துள்ளது.

மருத்துவப் பயிற்சிச் சான்றிதழ்களை அனுமதிப்பதில் எம்எம்சி-யின் நீண்ட கால தாமதங்கள், மருத்துவர்களை தொழில்ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஓர் இக்கட்டான நிலையில் தள்ளியிருப்பதாக அண்மையில் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.

நிர்வாகத் தவறுகள் விதிகளைப் பின்பற்றும் மருத்துவர்களைக் குற்றவாளிகளாக்கிவிடக் கூடாது என்று மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாண்டு ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, இந்தச் சூழ்நிலையானது, மலேசியாவில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களை, குறிப்பாக தனியார் துறையில் பணி புரியும் மருத்துவர்களை, சட்ட மற்றும் தொழில்ரீதியான நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மலேசிய மருத்துவ மன்றமானது உடனடியாக மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related News