Aug 13, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானில் துணை ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிகளை அறிமுகப்படுத்த மந்திரி பெசார் பரிசீலனை
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலானில் துணை ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிகளை அறிமுகப்படுத்த மந்திரி பெசார் பரிசீலனை

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முக்கிய துறைகளுக்கு துணை ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் டத்தோ இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலச் செயலகமான விஸ்மா நெகிரியில் தனது முதல் நாளில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இந்த புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், முழு ஆட்சிக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை வழக்கம்போல் 10-ஆகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியலானது, ஆட்சியாளர் யாங் டி-பெர்த்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர்- இன் ஒப்புதலுக்குப் பிறகு, வரும் ஆகஸ்ட் 7 முதல் 9-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படமாட்டாது என்றும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மூத்த ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி தொடருமா என்பது குறித்து இன்னும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி