ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் வேளையில் லஞ்ச ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் அரசியல்வாதிகளின் பெயர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அம்பலப்படுத்த வேண்டும் என்று C4 ( சி.4) என்று அழைக்கப்படும் லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடி வரும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்பிஆர்எம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு ஊழல்வாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டு, எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை அம்பலப்படுத்துவது அந்த ஆணையத்தின் தார்மீக கடப்பாடாகும் என்று C4 அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி புஷ்பன் முருகையா கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் குற்றம் இழைத்து இருப்பதற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்குமானால் அவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவதில் எஸ்பிஆர்எம்மிற்கு பிரச்சனை இருக்காது என்று தாங்கள் நம்புவதாக புஷ்பன் முருகையா குறிப்பிட்டுள்ளார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


