Oct 18, 2026
Thisaigal NewsYouTube

ஆடவருக்கு ஆயிரம் வெள்ளி அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆடவருக்கு ஆயிரம் வெள்ளி அபராதம்

மலாக்கா,செப்டம்பர் 30-

ஓர் உணவகத்தில் தாம் ஆர்டர் கொடுத்த பானத்தை தாமதாக கொண்டு வந்து கொடுத்ததற்காக உணவகத்தின் பணியாளரை முகத்திலேயே குத்தியதாக கூறப்படும் ஆடவர் ஒருவருக்கு மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

செட்டியா மைதீன் என்ற 49 வயதுடைய நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சாரதா ஷீன்ஹா முகமது சுலைமான், அபராதத்தை விதித்தார்.

சம்பந்தப்பட்ட நபர், கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மதியம் 12 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டத்தில் மேடன் செலரா செமபோக் -கில் உள்ளநோரா ஆசம் பேடாஸ் உணவகத்தில் 43 வயது வங்காளதேசியை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →