பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.18-
ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைத்து ஈடிஎஸ் ரயில் சேவை வழித்தடங்களுக்கும் 30 விழுக்காடு தள்ளுபடியை மலாயன் இரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி வழங்குகிறது.
இது குறித்து கேடிஎம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தள்ளுபடி இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களின் இரயில் எண் மற்றும் பயணத் தேதியைப் பொறுத்து, NURRAMADAN அல்லது RAMADANTIBA ஆகிய விளம்பரக் குறியீடுகளைப் பயன்படுத்தி இந்தத் தள்ளுபடியைப் பெறலாம்.
பயணச் சீட்டுகளை KITS மொபைல் செயலி, கேடிஎம்பி அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் உள்ள கேடிஎம்பி கியோஸ்க் இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
முன்னதாக, சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு, பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 22 வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட ஈடிஎஸ் பயணங்களுக்கு 20% தள்ளுபடியை கேடிஎம்பி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








