Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கு சம்பளமுறை, 4 பணிக்குழு அமைக்கப்படும்
தற்போதைய செய்திகள்

முற்போக்கு சம்பளமுறை, 4 பணிக்குழு அமைக்கப்படும்

Share:

முற்போக்கு சம்பளக் கொள்கை மீதான அமைச்சரவை சிறப்புக்குழு மற்றும் நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு துணையாக நான்கு பணிக்குழுக்கள் அமைக்கப்படும் என்று பொருளாதார துணை அமைச்சர் டத்தோ ஹனிஃபா ஹாஜார் தாயிப் ரம்லி தெரிவித்துள்ளார்.

கொள்கை மேம்பாடுக்குழு, முறையை மேம்படுத்தும் குழு, திறனை உயர்த்தும் குழு மற்றும் வருடாந்திர சம்பளத்தை உயர்த்தும் வழிகாட்டல் குழு என நான்கு பணிக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முற்போக்கு சம்பள கொள்கையை அறிமுகப்படுத்தும் வியூகமானது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி அத்திட்டம் சென்றடைவதை உறுதி செய்வதற்கு அதன் அமலாக்க செயல்முறையை இந்த நான்கு பணிக்குழுவும் வகுக்கும் என்று டத்தோ ஹனிஃபா தெரிவித்தார்.

Related News