வேலைக்குச் சென்ற தனது கணவர் கடந்த இரண்டு நாட்களாக வீடு திரும்பாதது குறித்து, குடும்ப மாது ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
37 வயதுடைய தமது கணவர் செ.ஜெகன் காணாதது குறித்து, டெங்கில், தாமான் டத்தோ எம்.எஸ்.மணியம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த எஸ்.லோகேஸ்வரி சிப்பாங், டெங்கில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
கடந்த மே 6 ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு, வீட்டிலிருந்து புறப்பட்டு, புத்ராஜெயா, பிரேசின்ட் 19 பகுதியில் உள்ள சிமெட் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற பின்னர், அவர் வீடு திரும்பவில்லை என்று லோகேஸ்வரி தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொழிற்சாலையில் விசாரித்த போது, தமது கணவர் அன்றைய தினம் வேலை முடிந்து மாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று லோகேஸ்வரி தமது புகாரில் தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


