Mar 13, 2026
Thisaigal NewsYouTube
மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Share:

ஷா ஆலாம், ஜனவரி.21-

தவறான முறையில் செய்யப்பட்ட மார்பக அழகு சிகிச்சை காரணமாகப் பாதிக்கப்பட்ட 33 வயது சிகையலங்கார நிபுணருக்கு, ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்பீடு வழங்க ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஷாஹிரா என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், 2019-ஆம் ஆண்டு டாமன்சாரா பெர்டானாவில் உள்ள ஓர் அழகு நிலைய உரிமையாளர் மீது சிவில் வழக்குத் தொடர்ந்தார். 2,000 வெள்ளி செலவில் மார்பகப் பெருக்கத்திற்காகச் செய்யப்பட்ட 'பில்லர்' ஊசி சிகிச்சை அவருக்குத் தோல்வியில் முடிந்தது.

சிகிச்சை முடிந்த உடனேயே அவருக்குக் கடும் வலி ஏற்பட்டுள்ளது. சில நாட்களிலேயே தொற்று மற்றும் உடல்நலச் சிக்கல்கள் காரணமாக அவர் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக அவர் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

கடமை தவறியது மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டது தொடர்பான இந்த வழக்கில், சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை அந்தப் பெண்ணுக்கு இன்று சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Related News

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்