Oct 1, 2026
Thisaigal NewsYouTube

அக்டோபர் மாத சாரா உதவி, இன்று முதல் பயனர்களின் மைகாட் கணக்கில் வரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அக்டோபர் மாத சாரா உதவி,  இன்று முதல் பயனர்களின் மைகாட் கணக்கில் வரவு

அக்டோபர் மாதத்துக்கான அடிப்படை ரஹ்மா உதவித் தொகையான சாரா, தகுதி பெற்ற பயனர்களின் மைக்காட் கணக்குகளில் இன்று முதல் வரவு வைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, எஸ்.டி.ஆர். உதவியைப் பெறும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 100 ரிங்கிட் சாரா உதவி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கும் தனிநபர்களுக்கும் தலா 50 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

எஸ்.டி.ஆர். மற்றும் இ-காசிஹ் ஆகிய இரு பிரிவுகளிலும் இடம்பெறும் பயனீட்டாளர்களுக்கு குடும்பங்களுக்கு 200 ரிங்கிட், மூத்த குடிமக்களுக்கு 150 ரிங்கிட், தனிநபர்களுக்கு 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

சாரா உதவியைப் பயன்படுத்தி அரிசி, முட்டை, ரொட்டி, சமையல் எண்ணெய், மருந்துகள், உறைந்த உணவுகள், பதிவு செய்யப்பட்ட உணவுகள் மற்றும் பள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட 15 வகையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கலாம்.

நாடு முழுவதும் 14,700-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் இந்த உதவியைப் பயன்படுத்தலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →