அண்மையில் ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை நெரிசலுக்கு இங்கு நடக்கும் சாலை பராமறிப்புப் பணிகளே மூலகாரணம் என அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஃபாஸ்லி முகமது சலே தெரிவித்தார்.
பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் 29 இடங்களில் சாலை பழுதடைந்துள்ளது.
மேலும், ஜோகூர் பாருவில் 115 இடங்களிலும் ஜோகூர் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள சாலைகளில் 19 பராமறிப்புப் பணிகளும் ஊராட்சி மன்றங்களின் சாலைகளில் 63 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது என அவர் மேலும் சொன்னார்.
இந்தப் பிரச்சனையைக் கையாள பல வழிமுறைகளைத் தமது தரப்பு பயன்படுத்தி வருகிறது எனக் கூறும் முகமது ஃபாஸ்லி, குறிப்பாக, சில பணிகளை உச்ச நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் சொன்னார்.








