கோலாலம்பூர், டிசம்பர்.17-
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் உதவித் தொகையற்ற பெட்ரோல் ரோன் 95 ஆகியவற்றின் சில்லறை விலை லிட்டருக்கு முறையே 3 காசு மற்றும் 2 காசு வீதம் குறைந்துள்ளது. அவை முறையே லிட்டருக்கு 3 ரிங்கிட் 24 காசு மற்றும் 2 ரிங்கிட் 62 காசு என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதவித் தொகைக்குரிய பெட்ரோல் ரோன் 95 லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 காசு என விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4 காசு குறைந்து, 3 ரிங்கிட் 02 காசுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








