Jul 10, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் பள்ளி மாணவி உயிரிழப்பு: போலீஸ் விசாரணைகளுக்கு கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு
தற்போதைய செய்திகள்

சிரம்பான் பள்ளி மாணவி உயிரிழப்பு: போலீஸ் விசாரணைகளுக்கு கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு

Share:

சிரம்பான் செந்தாயான்-இல் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை காலை, கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 16 வயது மாணவியின், குடும்பத்தினரின் உணர்வுகளை மதித்து அவர்களுக்குத் தேவையான இடைவெளியை வழங்குமாறு கல்வி அமைச்சர் பத்லினா சிடெக் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

தற்போது போலீசாரின் விசாரணையில் உள்ள இச்சம்பவத்திற்கு, கல்வி அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் ஆன்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்தனை செய்வதாகவும் பத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இந்த கடினமான சோதனையை எதிர்கொள்ளும் அம்மாணவியின் குடும்பத்தினருக்கு பொறுமையும் மனவலிமையும் கிடைக்கட்டும் என்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோகமான காலக்கட்டத்தில் வீண் வதந்திகளைப் பரப்புவதை விட, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறந்த உதவிகளை வழங்குவதையே முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும் என்றும் பத்லினா சிடெக் வலியுறுத்தியுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்