Jul 10, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் திடீர் புயல் தாக்குதல் – 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் திடீர் புயல் தாக்குதல் – 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Share:

பேராக் மாநிலம் ஈப்போவில் உள்ள அன்ஜுங் பெர்சாம் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள ஏழு குடியிருப்பு பகுதிகளில், நேற்று மாலை கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய திடீர் புயல் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இது குறித்து கிந்தா உள்நாட்டுப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இடியுடன் கூடிய புயல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நிலைமையை கண்காணிக்க அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும், மாலை 5.05 மணியளவில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தூய்மைப் பணியாளர்கள் அனுப்பப்பட்டு, சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டதாக ஈப்போ நகர் மன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாதுகாப்பு கருதி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்