Jun 20, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் மாயமான ஆடவர் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த இரத்த கறை கண்டு தாயார் புகார்
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் மாயமான ஆடவர் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த இரத்த கறை கண்டு தாயார் புகார்

Share:

ஜோகூரில் உள்ள தாமான் தம்போய் உத்தாமா, ஜாலான் பெர்காசா 2/9 பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மாயமானதாகப் புகாரளிக்கப்பட்ட 37 வயதுடைய ஆடவர் ஒருவர், பின்னர் ஜாலான் சுதேரா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்தவரின் தாயார், தனது மகனின் படுக்கையறை மற்றும் குளியலறையில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு போலீசில் புகார் அளித்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜாலான் சுதேரா பகுதியில் அந்த ஆடவரின் காரையும், அங்கிருந்து 30 மீட்டர் தூரத்தில் அவரது சடலத்தையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், டே ஆன் யென் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆடவரின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News