Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மரணம் விளைவித்ததாக லோரி ஓட்டுர் குற்றஞ்சாட்டப்பாட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மரணம் விளைவித்ததாக லோரி ஓட்டுர் குற்றஞ்சாட்டப்பாட்டார்

செரம்பன், அக்டோபர் 01-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிரம்பானில் சாலை சமிக்ஞை விளக்குப்பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த 4 வாகனங்களை மோதித் தள்ளி, ஒரு மாதுவிற்கு மரணம் விளைவித்ததாக போதைப்பொருள் உட்கொண்டிந்ததாக நம்பப்படும் லோரி ஓட்டுநர் ஒருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஜிம்ஹர் அல்பசார் என்ற அந்த லோரி ஓட்டுநர், நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஸி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அந்த லோரி ஓட்டுநர் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மாலை 4.15 மணியளவில் சிரம்பான், ஜாலான் பெர்சியரன் நெகிரி, சாலையில் தாம் செலுத்திய கனரக மண் லோரியின் மூலம் 4 வாகங்களை மோதித் தள்ளியதுடன் 31 வயது மாதுவிற்கு மரணம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த விபத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட அந்த லோரி ஓட்டுநர், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை மற்றும் கூடிய பட்சம் ஒரு லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்கவரத்து சட்டத்தின் கீழ் அந்த லோரி ஓட்டு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →