Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அருட்செல்வம் மீது விசாரணையா? பிஎஸ்எம் கட்சி சாடியது
தற்போதைய செய்திகள்

அருட்செல்வம் மீது விசாரணையா? பிஎஸ்எம் கட்சி சாடியது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.14-

தோட்டப் பாட்டாளிகள் வீட்டுடைமைப் பிரச்னை தொடர்பாக நேற்று மகஜர் கொடுப்பதற்கு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் சாலையில் குவிந்த பாட்டாளி மக்களுக்கும், போலீசாருக்கும் இடையில் நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் மலேசிய சோஷலிச கட்சியான பிஎஸ்எம்மின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வம் கீழே தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தரையில் விழுந்து காயம் அடைந்ததாகக் கூறப்படும் அருட்செல்வத்திற்கு எதிராக போலீசார் விசாரணை நடத்துவதை அந்தக் கட்சி இன்று கடுமையாகச் சாடியது. அருட்செல்வம் எந்தவொரு தவற்றையும் இழைக்காத நிலையில் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதை பிஎஸ்எம் கண்டிப்பதாக அதன் பொதுச் செயலாளர் எம். சிவரஞ்சனி தெரிவித்தார்.

போலீசாருடனான தள்ளுமுள்ளுவில் அருட்செல்வம் கீழே விழுந்து, மக்கள் தூக்குவதை அனைத்து ஊடகக் காணொளிகளில் வெளியிடப்பட்டு இருப்பதை சிவரஞ்சனி சுட்டிக் காட்டினார்.

நேற்று பிஎஸ்எம் கட்சி ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளிகள், மகஜர் கொடுப்பதற்கு நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற போது அதனைத் தடுக்க போலீசார் முற்பட்ட போது பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Related News