Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் விபத்து: கழிவு நீர் குழிக்குள் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்து: கழிவு நீர் குழிக்குள் விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

தம்பின், பிப்ரவரி.03-

தம்பின் அருகே தனது சகோதரருடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த 14 வயது சிறுவன், 10 மீட்டர் ஆழமுள்ள திறந்த கழிவுநீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்தார்.

நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 10.10 மணியளவில், உயிரிழந்த சிறுவனும் அவரது 17 வயது சகோதரரும், இரவு உணவிற்குப் பிறகு, கோலா ஈனாவில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அமிருடின் சரிமான் தெரிவித்துள்ளார்.

மூத்த சகோதரன் வளைவு ஒன்றில் திரும்பும் போது, அவரது இரு சக்கர வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து, கட்டுமானப் பணியில் இருந்த கழிவுநீர் குழிக்குள் மோதியதாக நம்பப்படுகிறது.

சற்று நேரத்திலேயே சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பாதிக்கப்பட்ட சிறுவனை குழியிலிருந்து வெளியே மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினர்.

இருப்பினும், அவர் இரவு 11.30 மணியளவில் அச்சிறுவன் உயிரிழந்தார்.

Related News