கெடா, பந்தாய் மெர்டேக்காவில் கயாக்கிங் பயிற்சியின் போது பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்விக் கழகத்தின் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வி அமைச்சு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர் பயிற்சிக் கல்விக் கழகங்களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு கல்வித் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அகமது உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெற்றோர்களின் கவலையைப் போக்கவும் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.
அமைச்சின் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும். இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வரும் வேளையில், பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்துக் கல்வி அமைச்சும் உள்நாட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களைச் சரவாக்கிற்கு கொண்டு செல்ல தேவையான உதவிகளை அமைச்சும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி கழகங்க நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.








