கோலாலம்பூர், அக்டோபர்.25-
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நாளை துவங்கவுள்ள 47-வது ஆசியான் உச்சி மாநாட்டில், விருந்து உபசரிப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், 24 மணி நேரமும் உழைத்து, 5,000 பிரதிநிதிகளுக்காக உணவு தயாரிக்கின்றனர்.
அடுத்த மூன்று நாட்களுக்கு தினமும் ஐந்து முறை உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள அவர்கள், மலேசிய உணவுகளின் சுவையையும், தரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உணவுப் பட்டியலை வடிவமைத்துள்ளனர்.
மலேசியாவின் பல்சுவை சமையல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ரெண்டாங், வறுவல், சார் கொய் தியாவ் மற்றும் சாத்தே போன்ற உணவுகள் தயாரிக்கப்படுகின்றன என்று சமையல் குழுத் தலைவர் ஹிஷாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் விருந்து உபசரிப்பில், The King of Fruits என்றழைக்கப்படும் சுரியானும் பரிமாறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், உள்ளூர் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானங்கள் மற்றும் பாரம்பரிய தேயிலைக் கொண்டு தயாரிக்கப்படும், "தே தாரிக்" பிரதான சிறப்பாக இருக்கும் என்றும் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.








