Mar 29, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரி மருமகனிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரி மருமகனிடம் விசாரணை

Share:

புத்ராஜெயா, மே.26-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அதிகாரி ஒருவரின் வீட்டில் 17 கோடியே 70 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த முன்ளாள் பிரதமரின் மருமகன் டத்தோ ஜோவியன் மண்டாகேவினிடம் எஸ்பிஆர்எம் விசாரணை செய்யவிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் இஸ்மாயில் சப்ரியின் மருமகன் தற்போது விசாரணை வளையத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியா, ஜகார்த்தாவில் பிரபலமான பேஃஷன் வடிவமைப்பு மையத்தை நடத்தி வரும் டத்தோ ஜோவியன் மண்டாகேவின் இடத்திலேயே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யபடும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News