Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மாணவர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர்கள், ஆசிரியர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

சிரம்பான், நவ.7-


சிரம்பானில் இடைநிலைப்பள்ளி ஒன்றின் கட்டடத்தின் நான்காவது மாடியிலிருந்து 16 வயது மாணவன் ஒருவன் கீழே விழுந்து மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவ அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைக்கப்படுவர் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி.முகமட் ஹத்தா சே டின் தெரிவித்தார்.

இன்று காலை 7.11 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவனின் மரணம், திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்த மாணவன் காலை 6 மணியளவில் பள்ளி கட்டத்திலிருந்து குதித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டான். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →