Oct 15, 2026
Thisaigal NewsYouTube

புற்று நோயால் போராடி வரும் மாணவன் சஞ்ஜீவ்விற்கு கை கொடுங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கெடா, ஜன. 20-

கெடா ஜித்தாராவிலுள்ள 10 வயது தனது மகன் சஞ்ஜீவ் த/பெ தனபாலசிங்கம் " BURKITT LYMPHOMA" எனும் புற்று நோயால் 4வது கட்டம் நிலையில் போராடி வரும் நிலையில் அவருக்கு கை கொடுப்பத்தற்கு மக்களின் ஆதரவை நாடுக்கிறார் அவரின் தாயார் கவிதா கணேசன் .

ஆரம்ப காலத்தில் மகன் சஞ்ஜீவுக்கு வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்தார். பெற்றோர்களாகிய நாங்கள் அது சாதாரணமான வலி என்று நினைத்தோம் . மகனின் அந்த வலிக்கு ஜித்ரா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தோம்.

ஆனால், இப்பொழுதுத்தான் தெரிகிறது அது புற்று நோய் என்று மனம் உடைந்த நிலையில் கவிதா கூறினார் .

ஜித்ரா துன் ஜாங்கிலுள்ள சீன ஆரம்பள்ளியில் பயின்று வந்த சஞ்ஜீவ் விளையாட்டுத்துறையில் மிகவும் சிறப்பாக விளங்கினார் .இதுவரை " Bola Keranjang " போட்டியில் கலந்து கொண்டு பள்ளிக்காக பல பதக்கங்களை பெற்று குவித்துள்ளார். இந்நோய் கண்டு இருப்பதாக அறிந்தப் பின் இப்பொழுது நான்கு மாதங்களாக என் மகன் வீட்டில் முடங்கிய நிலையில் உள்ளதார் என்று கவிதா கூறினார்.

தன் கணவர் தனபாலசிங்கம் லோரி ஓட்டுனர் ஆவார் . அவரின் மாத சம்பளத்தில்தான் ஐந்து குழந்தைகளையும் சஞ்ஜீவ் மருத்துவ செலவுகளை கவனித்து வருகிறோம்.

சஞ்ஜீவ் புற்று நோய்க்கான கிமோ மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் பினாங்கு பொதுமருத்துவமனையில்செய்து வருவதால் அவரின் உடல் மெலிந்து விட்டன. அத்துடன் தலை முடிகளும் உதிர்ந்து விட்டன.

அவரின் உடலுக்கு அதிக சத்துகள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அவருக்கு பிரத்தியேக பால் வழங்க வேண்டும்.இப்பாலின் விலை சற்று அதிகம் என்பத்தால் மக்கள் முடிந்தால் அதனை வழங்கி தன் மகனுக்கு கைக்கொடுக்கும் படி கவிதா பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.

இன்று மலேசிய புற்றுநோய் காப்பாளர் இயக்கத்தின் தலைவர் Zurainai Kamal , மாணவன் சஞ்ஜீவ்வை சந்தித்து கணிசமான நிதி உதவியை வழங்கினார் . இம்மாணவனுக்கு கைகொடுக்கும் நினைக்கும் பொதுமக்கள் 6451298201 Public Bank என்ற வங்கி கணக்கு வாயிலாக நிதி உதவியை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்தி - படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?