Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியரின் உம்ரா பயணம் தடைப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆசிரியரின் உம்ரா பயணம் தடைப்பட்டது

Share:

உம்ரா பயணத்தை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு இருந்த ஆசிரியர் ஒருவர், திடீரென்று கைது செய்யப்பட்டதால் அவரின் புனிதப் பயணம் தடைப்பட்டது. தனது சமயப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்ததாக அந்த ஆசிரியருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 வயதுடைய அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Batang kali- யில் உள்ள Tahfiz சமயப்பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் பெறப்பபட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Ahmad Faizal Tahrim தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை உம்ரா பயணத்திற்காக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் விமானத்தில் பறப்பதற்கு ஆயத்தமாக இருந்த அந்த ஆசிரியர், போலீஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக Ahmad Faizal குறிப்பிட்டார்.சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பாலியல் வக்கிர செயலுக்கு ஆளான சிறார்கள் அனைவரும், அவருடைய மாணவர்கள் ஆவார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று Ahmad Faizal தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்