May 4, 2026
Thisaigal NewsYouTube
அப்துல் ஹாமிட் முஹமட்டின் மறைவு நாட்டிற்கு ஒரு பேரிழப்பு - தலைமை நீதிபதி இரங்கல்
தற்போதைய செய்திகள்

அப்துல் ஹாமிட் முஹமட்டின் மறைவு நாட்டிற்கு ஒரு பேரிழப்பு - தலைமை நீதிபதி இரங்கல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.19-

முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹாமிட் முஹமட்டின் மறைவு நாட்டிற்கு ஒரு மிகப் பெரிய இழப்பாகும். அவர் நீதித்துறையில் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய சேவைகள் மகத்தானவை என்று கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்துல் ஹாமிட் 2007 நவம்பர் 1 முதல் 2008 அக்டோபர் 17 வரை மலேசியாவின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

அன்னாரது மறைவு ஒட்டுமொத்த நீதித்துறைக்கும், குறிப்பாக நாட்டிற்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்று நீதி பரிபாலனம் சார்பில் நாட்டின் தலைமை நீதிபதி வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அப்துல் ஹாமிட் இன்று மதியம் தனது 83-வது வயதில் மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார்.

Related News