May 5, 2026
Thisaigal NewsYouTube
போர்ட்டிக்சனில் கொலை: மியான்மார் இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

போர்ட்டிக்சனில் கொலை: மியான்மார் இளைஞர் கைது

Share:

போர்ட்டிக்சன், பிப்ரவரி.11-

போர்ட்டிக்சனில், சக நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 21 வயது மியன்மார் இளைஞரைப் போலீஸ் துறை கைது செய்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து, திங்கட்கிழமை இரவு போலீஸ் துறைக்குத் தகவல் கிடைத்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உடின் தெரிவித்தார்.

மஸ்லான் உடின் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, "பாதிக்கப்பட்ட நபர் கழுத்து மற்றும் உடலில் இதர பகுதிகளில் 29 கத்திக் குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்."

ஒரே நாட்டைச் சேர்ந்த அந்த நபர் மற்றும் சந்தேக நபர் இருவரும் அந்த அறையில் மது அருந்திக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

இருப்பினும், இந்த கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து இன்னும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் இருவரும் இறைச்சியைத் தணலில் வாட்டி எடுக்கும் தொழிலைச் செய்து வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News