பூச்சோங், ஜூலை.25-
பூச்சோங், புக்கிட் பூச்சோங்கில் ஆடவர் ஒருவர் லோரியில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேலும் இரண்டு சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்துள்ளனர்.
18 மற்றும் 19 வயதுடைய அந்த இரண்டு நபர்கள், நேற்று வியாழக்கிழமை பூச்சோங்கிலும், உலு சிலாங்கூரிலும் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த இரு நபர்களும் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் தொடர்பில் போலீசார் இதுவரை மூன்று நபர்களைக் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை சுபாங் ஜெயா, SS19 இல் முதலாவது நபர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரைப் போலீசார் சிறப்பு நடவடிக்கையின் வாயிலாக மீட்கப்பட்டதாக ஏசிபி வான் அஸ்லான் குறிப்பிட்டார்.








