Jun 28, 2026
Thisaigal NewsYouTube
கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி: அம்னோ இளைஞர் பிரிவு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

சட்டத்திற்குப் புறம்பான வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி தொடர்பாகக் குற்றம் சுமத்தப்படுபவர்களுக்குத் தங்கள் தரப்பிலிருந்து இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே அறிவித்துள்ளார். அமைதியான முறையில் ஒன்று கூடுவது என்பது அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஸம்ரி வினோத் - தாமிம் டஹாரி ஆகியோரை இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவற்படை நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். நேற்று இரவு சோகோ வணிக வளாகம் அருகே நடத்தத் திட்டமிடப்பட்ட இந்தப் பேரணி, பாதுகாப்பு காரணங்களுக்காகப் காவற்படையினரால் அனுமதி மறுக்கப்பட்டதால் தடைப்பட்டது.

Related News