Oct 9, 2026
Thisaigal NewsYouTube

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் 20 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் 20 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்

சுங்கை புலோ, ஜூன்.21-

சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் உள்ள அதிக மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளில் 20 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வசதியான கற்றல் சூழலை ஏற்படுத்தி தரும் நோக்கத்தை அது கொண்டுள்ளது என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், சௌஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி, பண்டார் பாரு சுங்கை பூலோ, சியேராமாஸ், புக்கிட் காடிங் ஆகிய இடைநிலைப் பள்ளிகளிலும் செக்‌ஷன் 6 கோத்தா டாமான்சாரா, ஶ்ரீ பிரிஸ்தீனா தேசிய தொடக்க நிலைப்பள்ளிகளிலும் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் .

மாணவர்களுக்கு வசதியான, உகந்த கற்றல் சூழலை உறுதிச் செய்வதே இதன் நோக்கம் என தொழில்முனைவோர்- கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சருமான டத்தோ ஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.

யாயாசான் பேங்க் ரக்யாட், KUSKOP-உடன் இணைந்து சுங்கை பூலோ நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 311 எஸ்பிஎம் மாணவர்களுக்கு 1 இலட்சத்து 43 ஆயிரத்து 200 ரிங்கிட் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் துணையமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →