May 22, 2026
Thisaigal NewsYouTube
தேடப்பட்டு வந்த நபர் சோதனையில் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

தேடப்பட்டு வந்த நபர் சோதனையில் பிடிபட்டார்

Share:

அம்பாங், பிப்ரவரி 28 -

போதைப்பொருள் வழக்கில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த சந்தேகப்பேர்வழி ஒருவர், போலீசார் மேற்கொண்ட சாலைத்தடுப்பு சோதனையில் பிடிபட்டார்.

நேற்று மாலை 6 மணியளவில் அம்பாங், புக்கிட் தெராத்தாய் என்ற இடத்தில் போலீசார் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொஹாமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

கம்போங் பாரு சுபாங்கில் அளிக்கப்பட்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அந்த நபர் தேடப்பட்டு வந்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News