Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அதிக புகை வெளியேற்றிய 934 வாகனமோட்டிகளுக்கு அபராதம் !
தற்போதைய செய்திகள்

அதிக புகை வெளியேற்றிய 934 வாகனமோட்டிகளுக்கு அபராதம் !

Share:

2023 மூன்றாவது காலாண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மாசு படிந்த புகையை வெளியேற்றிய 934 வாகனமோட்டிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அபராதத்தை விதித்துள்ளது.

டீசல்,, பெட்ரோல், மோட்டார் சைக்கிள் சத்தம், மோட்டார் சைக்கிள் கேஸ் ஆகியவற்றை உட்படுத்திய சோதனை நடவடிக்கைகளில் அந்த அபராதம் விதிக்கப்பட்டதாக அதன் சுற்றுச் சூழல் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ வான் அப்துல் லத்டிஃப் அப்துல் லடிஃப் வான் ஜஃபார் கூறினார்.

கரும்புகை அடர்த்திக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு (50 சதவிகிதம்) இணங்காத வாகனங்களுக்கும் அபராதம் வழங்கப்பட்டது எனவும் இந்த Ops Statik சோதனை நடவடிககை ஜேபிஜே ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதாகக் கூறினார்.

சுற்றுச் சூழல் துறையால் இந்த சோதனை நடவடிக்கை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய நாட்டில் காற்றின் தரம் தொடர்ந்து பராமரிக்கப் படுவதையும், மக்களுக்கு எப்போதும் சுத்தமான நிலையில் இருப்பதையும் உறுதி செய்வதே தமது தரப்பின் தலையாய கடமையாகும் எனவும் சொன்னார்

Related News