Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இன்ஃபுளுவென்ஸா A வைரஸைக் கட்டுப்படுத்த 12,500 மாணவர்களுக்கு இலவசத் தடுப்பூசி
தற்போதைய செய்திகள்

இன்ஃபுளுவென்ஸா A வைரஸைக் கட்டுப்படுத்த 12,500 மாணவர்களுக்கு இலவசத் தடுப்பூசி

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.17-

இன்ஃபுளுவென்ஸா A வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, நான்கு உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள 12,500 மாணவர்களுக்கு இலவசத் தடுப்பூசி வழங்க சிலாங்கூர் மாநில அரசு ஒரு மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்தத் திட்டம் அடுத்த வாரமே தொடங்க உள்ளதாகவும், உலு லங்காட், கோம்பாக், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இத்திட்டம் மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தலைமையில் நடைபெறும்.

இன்று நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாணவர்களிடையே தொற்று வேகமாகப் பரவுவது காரணமாக, இந்தத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

Related News