நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இவ்வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள் என்று மாநில மந்திரி பேசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.
10 பேரை உள்ளடக்கிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகிய கூட்டணிகளை சேர்ந்த அவர்களாக இருப்பார்கள் என்று அமினுடின் ஹருன் குறிப்பிட்டார்.
வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை விகாரச்சாரத்திற்கு ஏற்ப ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பங்கீடு அமையும் என்பதையும் மந்திரி பெசார் விளக்கினார்.
அமையவிருக்கும் இந்த ஆட்சிக்குழுவில் பழைய முகங்களும் புதிய முகங்களும் இடம் பெறுவதற்கான சாத்தியம் இருப்பதாக நேற்று இரண்டாவது தவணையாக மந்திரி பேசாராக பதவி ஏற்ற அமினுடின் ஹருன் குறிப்பிட்டார்.








