Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சமூக மாற்றத்திற்கான ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் இளம் பட்டதாரி
தற்போதைய செய்திகள்

சமூக மாற்றத்திற்கான ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் இளம் பட்டதாரி

Share:

படைப்பிலக்கியம் மூலம் மனிதநேயக் கருத்துக்களைப் பரப்பி, சமூகத்திற்குப் பங்களிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் 22 வயது இளம் பட்டதாரி எஸ். அனுசீதா.

சுல்தான் அஸ்லான் ஷா தொழில்நுட்பக் கல்லூரியின் வணிகவியல் பட்டதாரியான அனுசீதா, தனது அனுபவங்களின் அடிப்படையில் 'ஸ்டெப்ஸ் டுவேர்ட் ஹோம்' என்ற தனது முதல் நூலை எழுதியுள்ளார். குடும்பப் பிளவுகள் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொள்ளும் மனிதர்களின் நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

"ஒவ்வொருவரும் சிறந்த வாழ்க்கையைப் பெற தகுதியானவர்களே; இந்த நூல் வாசகர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தரும்" என்று கூறும் அனுசீதா, இந்த புத்தக விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழை எளியோரின் உதவிக்காக வழங்கத் திட்டமிட்டுள்ளார்.

இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றல் மூலம் சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்பதே அனுசீதாவின் நோக்கமாகும்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு