Jul 7, 2026
Thisaigal NewsYouTube
கருக்கலைப்பு குறித்து பொதுவிளக்கம் அளிக்க வேண்டும் – துணை அமைச்சருக்கு அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

கருக்கலைப்பு குறித்து பொதுவிளக்கம் அளிக்க வேண்டும் – துணை அமைச்சருக்கு அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

Share:

மலேசியாவில் கருக்கலைப்பின் சட்டநிலை குறித்து மக்களிடம் தெளிவான விளக்கம் அளிக்குமாறு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் லிம் ஹுய் யிங்-ஐ இரண்டு அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து ரிப்ராக்டிவ் ரைட்ஸ் அட்வகேசி அலையன்ஸ் மலேசியா மற்றும் வுமன்ஸ் எய்ட் ஆர்கனைசேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியாவில் கருக்கலைப்பும், அதற்கான சேவைகளை வழங்கும் கிளினிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் லிம் ஹுய் யிங் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது மற்றும் சட்ட ரீதியாக தவறானது என்று சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், தவறான தகவல்கள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தக் கூட்டறிக்கைக்கு எஸ்.ஐ.எஸ் ஃபாரம் மற்றும் பேமிலி பிரண்டியர்ஸ் உள்ளிட்ட மேலும் ஒன்பது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2027 இறுதிவரை இ-இன்வாய்ஸ் பிழைகளை அபராதமின்றி திருத்தலாம் /நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் முக்கிய அறிவிப்பு

2027 இறுதிவரை இ-இன்வாய்ஸ் பிழைகளை அபராதமின்றி திருத்தலாம் /நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் முக்கிய அறிவிப்பு

எல்பிடி2 கட்டுமானச் செலவை திருப்பிச் செலுத்த முடியாது – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

எல்பிடி2 கட்டுமானச் செலவை திருப்பிச் செலுத்த முடியாது – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சித்தியவானில் 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் 29 வயது ஆடவர் கைது

சித்தியவானில் 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் 29 வயது ஆடவர் கைது

பந்திங் பள்ளி கத்திக் குத்து சம்பவம்: கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

பந்திங் பள்ளி கத்திக் குத்து சம்பவம்: கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

காஜாங்கில் சாலையோரத்தில் வாகனத்தின் டயர் மாற்றியபோது விபத்து - ஆடவர் பலி

காஜாங்கில் சாலையோரத்தில் வாகனத்தின் டயர் மாற்றியபோது விபத்து - ஆடவர் பலி

ஜோகூர் தேர்தல்: ஆயுதப் படையினரின் முன்கூட்டியே வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கியது

ஜோகூர் தேர்தல்: ஆயுதப் படையினரின் முன்கூட்டியே வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கியது