Jul 18, 2026
Thisaigal NewsYouTube
சித்தியவானில் 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் 29 வயது ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

சித்தியவானில் 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் 29 வயது ஆடவர் கைது

Share:

பேராக் மாநிலம் சித்தியவானில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில், 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றைப் பதுக்கி வைத்திருந்த 29 வயது உள்ளூர் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராக் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை நடத்திய இச்சோதனையில், தாமான் தெருஸ் மாஜு பகுதியில் சந்தேக நபர் ஓட்டிச் சென்ற புரோட்டான் வீரா கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் 66.64 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ. என நம்பப்படும் போதைப்பொருள் அடங்கிய மூன்று சிவப்பு பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. மற்றும் கெட்டமின் போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு 6 ஆயிரத்து 547 ரிங்கிட் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர், அந்நபரின் வீட்டில் இருந்து 64.30 கிராம் எடையுள்ள கெட்டமைன் போதைப் பொருளையும், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related News

சித்தியவானில் 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்க... | Thisaigal News