Jul 7, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல்: ஆயுதப் படையினரின் முன்கூட்டியே வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கியது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் தேர்தல்: ஆயுதப் படையினரின் முன்கூட்டியே வாக்குப்பதிவு அமைதியாக தொடங்கியது

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு இன்று ஜூலை 7 -ஆம் தேதி காலை 8 மணி முதல் 64 வாக்குச்சாவடிகளில் அமைதியாகத் தொடங்கியது.

காலை முதலே வானிலை சாதகமாக இருந்ததால், போலீஸ் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் சிரமமின்றி வாக்களித்தனர்.

மொத்தம் 24 ஆயிரத்து 751 பேர் முன்கூட்டியே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 12 ஆயிரத்து 41 ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது துணைகளும், 12 ஆயிரத்து 710 போலீஸ் மற்றும் பொது நடவடிக்கைப் படையான ஜி.ஓ.எஃப். வீரர்கள் மற்றும் அவர்களது துணைகளும் அடங்குவர்.

வாக்குச்சாவடிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்தனர்.

மேலும், பல்வேறு மையங்களில் வாக்குப்பதிவு எந்தவித இடையூறும் இன்றி ஒழுங்காக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, முன்கூட்டியே வாக்குப்பதிவு மையங்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டம் கட்டமாக மூடப்படவுள்ளன.

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தாலும், காலை நேர வாக்குப்பதிவு பாதிப்பின்றி நடைபெற்றது.

ஜோகூர் மாநிலம் முழுவதும் 2.73 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், 56 சட்டமன்றத் தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

பொதுவாக்குப்பதிவு வரும் ஜூலை 11 நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

கருக்கலைப்பு குறித்து பொதுவிளக்கம் அளிக்க வேண்டும் – துணை அமைச்சருக்கு அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கருக்கலைப்பு குறித்து பொதுவிளக்கம் அளிக்க வேண்டும் – துணை அமைச்சருக்கு அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

2027 இறுதிவரை இ-இன்வாய்ஸ் பிழைகளை அபராதமின்றி திருத்தலாம் /நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் முக்கிய அறிவிப்பு

2027 இறுதிவரை இ-இன்வாய்ஸ் பிழைகளை அபராதமின்றி திருத்தலாம் /நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார் முக்கிய அறிவிப்பு

எல்பிடி2 கட்டுமானச் செலவை திருப்பிச் செலுத்த முடியாது – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

எல்பிடி2 கட்டுமானச் செலவை திருப்பிச் செலுத்த முடியாது – பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சித்தியவானில் 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் 29 வயது ஆடவர் கைது

சித்தியவானில் 208 தோட்டாக்கள், துப்பாக்கி, போதைப் பொருட்களுடன் 29 வயது ஆடவர் கைது

பந்திங் பள்ளி கத்திக் குத்து சம்பவம்: கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

பந்திங் பள்ளி கத்திக் குத்து சம்பவம்: கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

காஜாங்கில் சாலையோரத்தில் வாகனத்தின் டயர் மாற்றியபோது விபத்து - ஆடவர் பலி

காஜாங்கில் சாலையோரத்தில் வாகனத்தின் டயர் மாற்றியபோது விபத்து - ஆடவர் பலி