Sep 24, 2026
Thisaigal NewsYouTube
காஜாங்கில் சாலையோரத்தில் வாகனத்தின் டயர் மாற்றியபோது விபத்து - ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

காஜாங்கில் சாலையோரத்தில் வாகனத்தின் டயர் மாற்றியபோது விபத்து - ஆடவர் பலி

Share:

செராஸ்-காஜாங் விரைவுச்சாலையின் 13-ஆவது கிலோமீட்டரில் டயர் மாற்றிக் கொண்டிருந்த 46 வயது நபர் மீது வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக நேரில் பார்த்த சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நிகழ்ந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது, அந்த ஓட்டுநர், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி, பளுதடைந்த டயரை மாற்றிய பின்னர், எச்சரிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த வாளியை எடுக்கச் சென்ற போது, சிவப்பு நிற எம்பிவி ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News