Jul 18, 2026
Thisaigal NewsYouTube
பந்திங் பள்ளி கத்திக் குத்து சம்பவம்: கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக வழக்கறிஞர் தகவல்
தற்போதைய செய்திகள்

பந்திங் பள்ளி கத்திக் குத்து சம்பவம்: கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக வழக்கறிஞர் தகவல்

Share:

பந்திங்கில் உள்ள இடைநிலைப் பள்ளியில் நேற்று சக மாணவியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் 15 வயது மாணவி, போலீஸ் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அச்சிறுமிக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சட்ட உதவி அறக்கட்டளையான ஒய்.பி.ஜி.கே வழக்கறிஞர் எஸ். விஜயேஸ்வரி தேவி, தனது கட்சிக்காரரனான அச்சிறுமி, மாற்றுத்திறனாளி என்றும், அவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

நேற்று காலை நிகழ்ந்த இந்த கத்திக் குத்து சம்பவத்தில், 15 வயது மாணவிக்கு உடம்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

எனினும், அதிருஷ்டவசமாக உயிர்பிழைத்த அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News