பாலிங், செப்டம்பர்.21-
கெடா, பாலிங் பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு தனது மகனை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற தாய் ஒருவர் விபத்துக்குள்ளானதில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகமான சம்பவம் நேற்று காலை நிகழ்ந்துள்ளது என பாலிங் மாவட்டக் காவற்படையின் இடைக்காலத் தலைவர் செபுட்டி சுப்ரிண்டெண்டன் அஹ்மாட் சலிமி முகமட்
இந்த விபத்தில், 5 வயது சிறுவன் உயிர் பிழைத்துள்ளான், மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 28 வயது நபரும் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துக் காவற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








