Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூரில் தொடக்க சம்பளம்: வெ. 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வெள்ளி வரை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூரில் தொடக்க சம்பளம்: வெ. 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வெள்ளி வரை

ஜோகூர்பாரு, நவ. 5-


ஜோகூர் மாநிலத்தில் உயர் தொழில்திறன் பெற்றத் தொழிலாளர்களுக்கு தொடக்க சம்பளமாக 4 ஆயிரம் வெள்ளி முதல் 5 வெள்ளி வரை நிர்ணயிக்கப்படுவதாக ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

ஜோகூர் இடைக்கால சுல்தானின் இந்த அறிவிப்பு மூலம் நாட்டில் தொடக்க சம்பளமாக 4 ஆயிரம் வெள்ளி முல் 5 வெள்ளி வரை நிர்ணயித்து இருக்கும் முதலாவது மாநிலமாக ஜோகூர் விளங்குகிறது.

கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள ஜேதிடிசி ஜோகூர் திறன் மேம்பாட்டு மன்றம், இந்த லட்சியத்தை பூர்த்தி செய்யும் என்று துங்கு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
தொடக்க சம்பளமாக கூடுதல் தொகையை நிர்ணயிப்பது மூலம் ஜோகூர் மாநிலத்தில் ஆற்றல் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் ஜோகூர் மாநிலத்தின் கடப்பாட்டையும், அர்பணிப்பையும் காட்டுகிறது.

ஜோகூர் திறன் மேம்பாட்டு மன்றத்தைத் தவிர ஜோகூர் பிளாண்டேஷன் குரூப் பெர்ஹாட் எனப்படும் ஜோகூர் தோட்ட குழுமம் மூலம் ஜப்பானிய நிறுவனமான பூஜி ஆயில் ஆசியா பிரைவெட லிமிடெட், கூடுதல் சம்பளத்தை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று துங்கு இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →