கோத்தா கினபாலு, செப்டம்பர்.17-
மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில், அவதூறு காணொளி ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 13 – ஆம் தேதி, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 36 வயதான அந்நபர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர் வெளியிட்ட காணொளியில் ஸாராவின் மரணம் தொடர்பில் பல்வேறு அவதூறுத் தகவல்கள் இருந்ததோடு, மாணவர் ஒருவர் பற்றிய அடையாளங்களும் கூறப்பட்டிருந்ததாக சபா மாநில காவல்துறை ஆணையர் ஜவுதே டிக்குன் தெரிவித்துள்ளார்.








