Sep 12, 2026
Thisaigal NewsYouTube
பிறந்த குழந்தையின் பாதுகாப்பை சட்டவிரோதமாக மாற்ற முயன்ற இளம் தாய் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
தற்போதைய செய்திகள்

பிறந்த குழந்தையின் பாதுகாப்பை சட்டவிரோதமாக மாற்ற முயன்ற இளம் தாய் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Share:

குழந்தையைப் பெற்றெடுத்த 24 வயது பெண், பிறந்த குழந்தையின் நிரந்தர பாதுகாப்பை சட்டவிரோதமாக மற்றொருவரிடம் ஒப்படைக்கும் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சுங்கைப்பட்டாணி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

முன்னாள் தொழிற்சாலை ஊழியரான எஸ். கெல்சி என்ற பெண்மணி,செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் 18 முதல் 21-ஆம் தேதி வரை, தனியார் மருத்துவமனை ஒன்றில் தற்போது 12 நாட்களே ஆன தனது குழந்தையின் நிரந்தர பாதுகாப்பை 17 ஆயிரத்து 300 ரிங்கிட்டுக்கு மாற்றும் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டதின் கீழ் கெல்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெல்சிக்கு குறைந்த பிணைத் தொகையை நிர்ணயிக்குமாறு அவரது வழக்கறிஞர் ஆர்.எஸ்.என். ராயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். கர்ப்பமானதிலிருந்து அவர் வேலை இல்லாமல் இருப்பதாகவும், குடும்பத்தை கவனிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி