Sep 1, 2026
Thisaigal NewsYouTube
தஞ்சோங் பூங்காவில் தெருநாயை தாக்கிய செல்லப்பிராணி: உரிமம் ரத்து; 250 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

தஞ்சோங் பூங்காவில் தெருநாயை தாக்கிய செல்லப்பிராணி: உரிமம் ரத்து; 250 ரிங்கிட் அபராதம்

Share:

தஞ்சோங் பூங்காவில் தெருநாய் ஒன்றை செல்லப்பிராணியான நாய் ஒன்று தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பினாங்கு மாநகர மன்றம், நாயின் உரிமத்தை ரத்து செய்து, அதன் உரிமையாளருக்கு 250 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தாக்குதல் தொடர்பான காணொளி வைரலானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகர மன்றத் தலைவர் டத்தோ ஏ. ராஜேந்திரன் தெரிவித்தார்.

சம்பவத்தன்று வேறு ஒருவர் அந்த நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

தற்போது அந்த நாய் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், அவர் போலீஸ் துறையில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திரன் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை கால்நடை சேவைத்துறை முன்னெடுத்து வருகிறது.

மேலும், விலங்கொன்றை தாக்கத் தூண்டியதாகவோ அல்லது ஆத்திரமூட்டியதாகவோ யாரேனும் மீது குற்றச்சாட்டு அல்லது ஆதாரம் இருந்தால், போலீஸ் துறையில் புகார் செய்யுமாறு பொதுமக்களையும் கால்நடை சேவைத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News