Sep 12, 2026
Thisaigal NewsYouTube
நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது
தற்போதைய செய்திகள்

நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது

Share:

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நபர் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக நேபாள அதிகாரிகளிடம் மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தலை கோரியுள்ளது.

காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், அந்தத் தகவலின் உண்மை நிலையை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நபர் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள், முதலில் அவரது குடும்பத்தினருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை திரிசூலி பகுதியில், 23 மலேசியர்களும் இடம்பெற்றிருந்த குழுவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நேபாள நாட்டவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தகவல் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பொதுமக்களுக்கு தெரிவிக்கத் தகுந்த அடுத்தகட்ட தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்