பூடி மடானி திட்டத்தின் கீழ் மாதாந்திர அடிப்படை எரிபொருள் ஒதுக்கீடு இன்று முதல் 200 லிட்டரில் இருந்து 300 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அதிகரிப்பு பூடி95 ரோன் 95 பெட்ரோல் மற்றும் பூடி டீசல் ஆகிய இரு திட்டங்களுக்கும் பொருந்தும்.
மானிய விலையில் ரோன்95 ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென் என்ற நிலையிலும், டீசல் 2 ரிங்கிட் 10 சென் என்ற நிலையிலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.
தனியார் டீசல் பிக்கப் டிரக்குகள் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு மாதாந்திர ஒதுக்கீடு 400 லிட்டர் வரை அதிகரிக்கப்படுகிறது. ஏற்கனவே கூடுதல் 100 லிட்டருக்கு அனுமதி பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
புதிய விண்ணப்பங்களை பூடி மடானி இணையதளம் வழியாகச் செய்யலாம்.
இந்த மாற்றத்தால், பூடி95 மூலம் சுமார் 1 கோடியே 60 லட்சம் பயனர்கள் மானிய விலையில் பூடி95 பெறுகின்றனர். மேலும் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் மானிய டீசலுக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பு பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய தின உரையில் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளது.








